Other dimension By சிவா
- melbournesivastori
- Dec 12, 2020
- 2 min read
மென்டோனை கடந்து வேகமெடுக்கிறது ட்ரெயின்… எதிரே இருந்த 2 இளைஞர்கள் தீவிரமான விவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்… அதில் ஒருவன், ‘பாரி நீ ஆத்திகரா நாத்திகரா? ‘ என்று கேட்டான். அதற்கு பாரி, ‘நளன் …நான் ஆத்திகனும் இல்லை நாத்திகனும் இல்லை அதற்கு இடைப்பட்டவன்… தேடிக்கொண்டிருக்கிறேன் கடவுளை’ என்றான். அதற்கு நளன், ‘அது எப்படி ஒன்று நீ ஆத்திகனாக இருக்க வேண்டும் இல்லை நாத்திகனாக இருக்க வேண்டும் இரண்டுக்கும் இடைப்பட்ட என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?’ ‘நளன், கடவுளே இல்லை என்று அடித்து சொல்லுவான் நாத்திகன். நான் கும்பிடுபவன் தான் கடவுள் என்று சொல்வான் ஆத்திகன். நான் நம்மை இப்படி பேச வைக்கும் பிரம்மாண்டத்தை உருவாக்கிய படைப்பாளியை தேடுகிறேன் தேடிக்கொண்டே இருப்பேன்.. ‘ ஆரிஜன் ப்ராஜெக்ட் … பேரலல் ரியாலிட்டி பிரம்மாண்ட விவாதத்தில்… நோபல் பரிசை வென்ற பிராங்க் மற்றும் மரியா, வென்டி, லாரன்ஸ், பிரைன் மற்றும் டேவிட். இவர்களின் பேச்சு இவன் மறை கழன்டவன் என்று வெகுஜனதால் பேசப்படும் சயின்ஸ் விரும்பிகள் கேட்கும் பேச்சு…. மரியாவின் ஏற்றான் கொலைடரில் தேடும் டார்க் மேட்டர் பற்றிய பேச்சு…. பிரைன் இன் திரிடிக்கல் மல்டிவெர்ஸ் பற்றிய பேச்சு. ஒட்டு மொத்த வெகுஜனங்கள் கேளிக்கைகளில் ஈடுபட… சொந்த பிரச்சினைகளில் ஈடுபட… இவர்கள் தேடும் தேடல் மனித மாண்புக்கான தேடல். சிஎஸ்கேவின் சொதப்பலில் மனம் வெதும்பிய ஷங்கரும் விக்ரமும் பீரின் துணையை நாட… நன்றாக தொடங்கி இப்போது நாரஅடிக்கிறார்கள் என்று விக்ரம் வெதும்ப…. சங்கரோ எவ்வளவு கிளைன்டுகளின் வேலை இருக்கு அதை விட்டு இவர்களைப் பார்த்தது தப்பா போய்விட்டது… என்று புலம்ப… சோசியல் டிஸ்டன்ஸிங் இருப்பதற்கான அடையாளமே தெரியாமல் இயங்கியது உழவர் சந்தை… ஒருபுறம் வெண்டைக்காய்க்கு பேரம் பேச மறுபுறம் இளநீர் வியாபாரம் அமோகமாக நடக்க திரும்பிப் பார்த்தால் அந்த காலத்தில் திண்ணையில் அமர்ந்து பேசும் பேச்சுக்களை இப்போது திண்ணை இல்லாததால் பைக்குகளில் அமர்ந்து மெய்மறந்து பேசிக்கொண்டிருந்தனர். கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில்… பக்தர்கள் கூட்டம் covid-19 கான அறிகுறியே இல்லை…… ஒரு கடவுளை கும்பிட்டு மறு கடவுளுக்கு செல்லும் இடைப்பட்ட தூரத்தில் பிசினஸ் டீலிங்கை பேசத் தவறவில்லை… குடும்ப பிரச்சனைகளை பேசத் தவறவில்லை… அரசியலும் சினிமாவும் கொஞ்சம் குறைவாகவே இருந்தது…. இவைகளையும் மீறி மனம் உருகி கும்பிடும் ஒரு சிலருக்கு மனசுமை மிக அதிகமாக இருக்க வேண்டும். கொல்கத்தா ஹௌரா பாலத்திற்கு கீழே பார்த்தால் மும்பையின் குடிசைப் பகுதிகளை மிஞ்சும் அளவிற்கு ஏழ்மை தாண்டவமாடியது….. இந்த ஏழ்மையிலும் கிரிக்கெட் பற்றிய பேச்சு எங்கும் கேட்க முடிந்தது…. இவைகளை கடந்து லோவர் சர்குலர் ரோட்டில் சென்றால்… ஏழ்மைகாண அடையாளமே தெரியவில்லை. பெங்களூரு மெஜஸ்டிக் சர்க்கிளில் உள்ள கிருஷ்ணா பவனுக்குள் நுழைந்தால்… மசாலா தோசை செய்யும் உயர்தர சூட்சுமம் தெரிந்த ஒரே இடம் இதுதான் என்று அடித்துக் கூறும் அளவிற்கு அங்குள்ள மசாலா தோசையை சாப்பிட்டு கொண்டு இருந்தனர். ஒருபுறம் சாம்பார் வடை….. இவ்வளவையும் கவனித்துப் பார்த்தால்…. மனிதனின் எதிர்காலத்திற்கும் முன்னேற்றத்திற்கும் சிந்திக்க நேரம் இல்லையா.. இல்லை அதற்கான மக்கள் தான் இல்லையா என்று யோசிக்க தோன்றுகிறது. இதைக்கூற நான் யார் என்று கேட்கிறீர்களா? ஒருசில விஞ்ஞானிகளுக்கு என்னை போன்றோரை தெரிந்து இருக்கிறது…. அவர்கள் எங்களை watchers என்று கூறுகின்றனர். உலகம் முழுவதும் மற்ற ஒரு சிலருக்கு எப்போதாவது நாங்கள் லேசாக புகை மண்டலமாக கண்ணுக்குப் புலப்படுவது உண்டு. உலகின் பெரும்பாலான மக்களால் நாங்கள் பேய்கள் என்று அறிய படுகிறோம். உண்மையில் நாங்கள் உங்களுக்குப் பெறலல்லாக வாழும் வேறு டைமென்ஷனில் உள்ள ஜீவன்கள்.
தொடர்புக்கு @ melbournesivastories@gmail.com



