அதே இடம் By சிவா
- melbournesivastori
- Dec 8, 2020
- 7 min read
ஆண்ட்ரு சொன்னதை மிக் கொஞ்சம் சீரியஸாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்….. இப்பொழுது அதைப் பற்றி பேசி பிரயோஜனமில்லை. மிக் கொஞ்சம் எதையும் பார்க்கும் நெஞ்சம் படைத்தவன். கேட்கவேண்டுமா மனைவியும் ஒரே குணம் படைத்தவராக அமைந்து விட்டால்…. covid-19 லாக் டவுனினால் எங்கும் ஒரு வித மன அழுத்தம் இருந்தது….ஒரு வாரத்திற்கு முன்பு மாநில முதல்வர் தளர்த்திய வழிகாட்டுதலால் எல்லோரும் வார இறுதி நாட்களில் வெளியே செல்ல முன்னேற்பாடுகள் செய்து விட்டனர். அலுவலகங்களிலும் எல்லோருக்கும் ஒரே பேச்சு இந்த வார இறுதியில் எங்கே செல்லப்போகிறோம் என்று…. இந்த உந்துதல் மிக்கையும் விட்டு வைக்கவில்லை, மனைவி கேத்தியுடன் ராசனில் வெள்ளி சனி இரவுகள் தங்க முடிவு செய்தான். அதிர்ஷ்டவசமாக தங்க இடமும் கிடைத்தது. ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை வெள்ளிக்கிழமை மதியமே எல்லோருக்கும் வார இறுதியின் மகிழ்ச்சி தொடங்கும்.. முன்தினமே எல்லாவற்றையும் தயார் செய்து விட்டதால் வெள்ளிக்கிழமை அலுவலக பணி முடிந்ததும் மிக்கும் கேத்தியும் வீட்டிற்கு சென்று இரு நாட்களுக்கு தேவையான ஏற்கனவே தயார் செய்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கிளம்பினர். வரப்போகிற பிரச்சனை தெரிந்தால் அப்படியே திரும்பி வீட்டுக்கு வந்து விட்டிருப்பார்கள்… விதி யாரை விட்டது? மிக்கின் விதியுடன் நாமும் பயணம் செய்வோம்….. பிரின்சஸ் பிரிவேவை பிடித்து ஒரு அரை மணி நேரம் பயணம் செய்து இருப்பார்கள். பிரயாணம் இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கும். சரி அங்கு சென்று சாப்பிடுவதைவிட மெக்டோனல்ஸ் சென்று சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம் என்று சென்றனர்; சாப்பிட்டனர்…..அப்போதுதான் கேத்திக்கு ஞாபகம் வந்தது… மிக் வரும் முன் வீட்டில் அயன் செய்து அயன்பாக்ஸ் சுவிட்ச் ஆஃப் செய்யாமல் வந்துவிட்டது…. பதட்டமுடன் மிக்கிடம் கூற.. உடனடியாக வீடு திரும்பினர்…. மேலைநாடுகளில் எல்லோரும் நம்பும் தேவதை தடுக்கிறதோ என்னவோ?! நினைத்தபடியே அயன்பாக்ஸ் சுவிட்ச் ஆப் செய்யப்படாமல் இருந்தது, ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு…. ஒரு கணம் ஒரே கணம் இப்போது செல்லலாமா இல்லை இரவு இங்கேயே தங்கி தங்கிவிட்டு மறுநாள் விடியற்காலை கிளம்பலாமா என்று…… கிளம்பிவிட்டோம் ஏன் நிற்பது இப்போதே கிளம்பிசெல்லலாம் என்று இருவரும் முடிவு செய்து ராசனை நோக்கி பயணப்பட்டனர் ராசனை அடைந்துவிட்டனர். குடும்பங்கள் தங்க இரு பெரிய கேபின்கள் 30 அடிகள் இடைவெளி விட்டு மரங்களின் ஊடே அமைதியான இடத்தில் இருந்தது. இதில் இருவரும் ஏற்கனவே தங்கியிருக்கின்றனர். முகப்பில் இருக்கும் அலுவலகத்தில் தனக்குத் தேவையான சாவியை வாங்கிக்கொண்டு இருவரும் கேபினுக்கு வந்தனர். மாலை ஏழரை மணிதான் ஆகியிருந்தது.. நெஞ்சுரம் படைத்தவர் களுக்காக நடத்தப்படும் இரவு சுற்றுலா 9 மணிக்கு ஆரம்பிக்கும் பக்கத்து ஊரில்.. அங்கு செல்ல அரை மணி நேரம் போதும்….. மறுபடி வீட்டுக்குச் சென்று வராமலிருந்தால் கிளம்பிச் சென்றிருப்பார்கள். நாளை இரவு செல்லலாம் என்று முடிவெடுத்து விட்டு, எடுத்து வந்து பொருட்களை கேபினில் வைத்துவிட்டு இருவரும் நடைபயில வெளியே சென்றனர்…. திரும்பி கேபினுக்கு வரும்போது இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகி விட்டிருந்தது. பக்கத்தில் இருக்கும் கேபினில் யாரும் வந்திருப்பது போல் தெரியவில்லை. சுற்றுவட்டாரத்தில் மயான அமைதியாக இருந்தது… சரி இரவு இருவரும் தான் தங்க வேண்டும் என்று கேபினுக்குள் சென்றனர். பயணக் களைப்பு நடைபயின்ற கலைப்பு இருவரும் அசந்து தூங்க ஆரம்பித்தனர். இரவு எத்தனை மணி என்று தெரியவில்லை கேத்தி தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தால் மிக்கும் தூக்கம் வராமல் கேத்தியை பார்த்து என்ன என்று கேட்டான். என்னவோ தெரியவில்லை மிகுவும் தலை வலிக்கிறது.. இரண்டு பெனடால் இருந்தால் கொடுக்கவும் என்று கேட்க.. எடுத்துவந்த பைகளில் தேட… தலைவலி மாத்திரை அங்கு இல்லை. அப்போதுதான் நினைவுக்கு வந்தது… காரில் எப்போதுமே ஒரு அட்டை அளவிற்கு மாத்திரை இருக்கும்…. சரி எடுத்து வருகிறேன் என்று கூறி விட்டு கதவை சாத்தி விட்டு வெளியே வந்தான். கும்மிருட்டு மயான அமைதி….. டார்ச் அடித்துக் கொண்டே வந்து காரின் கதவைத் திறந்து க்லோ பாக்ஸில் இருக்கும் தலைவலி மாத்திரையை எடுத்துக்கொண்டு திரும்பி காரின் கதவை மூடினான். அவனால் ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை சட்டையை யாரோ பிடித்து இழுத்தார்கள். ஒரு சில வினாடிகள் பயம் நெஞ்சை அடைத்து திரும்பக் கூட பயமாக இருந்தும் மெதுவாக திரும்பினான்….. மிக்குக்கே லேசான சிரிப்பு வந்துவிட்டது… காரின் கதவை மூடும் போது சட்டையும் சேர்ந்து மூடி கொண்டதனால் அவனால் நடக்க முடியவில்லை…….. ஒரு அடி எடுத்து வைத்தான்.. பக்கத்தில் இருந்த புதரில் சலசலவென்று சத்தம் வந்தது… இப்போது உண்மையாகவே எனக்கு வந்து விட்டது.. இருந்தும் அங்கே டார்ச் அடித்து பார்த்தான்….
பிறகுதான் தெரிந்தது போசம் எனப்படும் சிறு விலங்கினம் ஓடிக்கொண்டிருப்பது…. இதைத் தெரிந்து கொண்டு நடக்க முற்படும் முன்பே ‘ரொம்ப தைரியமானவர் தான் நீங்கள்’ என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டு தூக்கிவாரிப்போட்டது. பயத்துடன் திரும்பிப் பார்த்தால் ஒரு இளம் பெண் தான் அந்தக் கேள்வியைக் கேட்டது. ஓ அவரும் நம்மைப் போன்ற சுற்றுலா பயணி தான் என்று புரிந்து கொண்டதும், ஏன் நான் தைரியமாக இருக்க வேண்டும் இங்கு வருவதற்கு என்று கேட்டான். உங்களுக்கு தெரியாதா இந்த இடத்தைப் பற்றி… இங்கு வருவதற்கு எல்லோருமே பயப்படுவார்கள். ஆமாம் ஆமாம் என் நண்பனும் இங்கு வருவதற்கு முன் அதைப் பற்றிக் கூறினான் ஆனால் நான் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. அவள் ஏன் என்று வினவினாள்….. பெரிதாக ஏதும் இல்லை எனக்கு நம்பிக்கை இல்லை அவ்வளவுதான். அந்தப் பெண்ணும் கூறினாள் எனக்கும் நம்பிக்கை இல்லை தான்… அப்போதுதான் மிக் கவனித்தான் பக்கத்து கேபினின் உள்ளே ஒரு சிறு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஓ நீங்கள் தாமதமாக வந்தீர்களா நாங்கள் இரவு வரும்போது 9 மணிக்கு மேல் ஆகி விட்டது அப்போது யாரும் இந்த கேபினுக்கு வரவில்லை என்றான் கேள்விக்குறியோடு…..அவள் அதற்கு ஆமாம் நாங்கள் வரும்போது பத்து மணிக்கு மேலாகி விட்டிருந்தது… உங்கள் பெயர் என்ன? நீங்கள் என்ன தனியாக இங்கே இருக்கிறீர்கள்? கணவருடன் வந்து இருக்கிறீர்களா என்று வினவினான். அவள் ஆமாம் என்று தலையசைத்தாள். கணவர் எங்கே என்ற பார்வையுடன் அவளைப் பார்க்க, நான் ராபின், இந்த லாட்ஜை நடத்துபவர் என்னுடைய கணவரின் நண்பர் அவருடன் முகப்பு அலுவலகத்தில் பேசிக்கொண்டிருக்கிறார் என்றாள். சரி இந்த இரண்டு புதிய கேபின்களையும் எப்போது கட்டினார்கள் என்று உங்களுக்கு தெரியுமா என்று கேட்டாள்? தெரியாது இரு வருடங்களுக்கு முன்பு நான் வரும் போது இது இந்த இரண்டு கேபின்களும் இங்கு இல்லை என்றான். கேத்திக்கு தலைவலி மாத்திரை எடுத்து வர வந்தோம் என்ற நினைப்பே வர விடாமல் அவள் பேசிக்கொண்டே இருந்தாள். நீங்கள் என்ன கேள்வி பட்டீர்கள் இந்த இடத்தைப்பற்றி என்று வினவினாள்… இந்த இடத்தைப் பற்றி இல்லை இதற்கு பக்கத்தில் உள்ள ஊரில் நிறைய பேய் நடமாட்டம் உள்ளதாக என் நண்பர்கள் பலர் கூறியுள்ளனர்.. நானும் என் மனைவியும் சிறிது முன்பே வந்திருந்தால் அந்த பேய் இரவு சுற்றுலாவிற்கு சென்று வந்து இருப்போம் என்றான். அவள் அதற்கு…. உங்களுக்கு முழுதான விபரம் தெரியவில்லை என்று நினைக்கிறேன்… விபரம் என்று கூறுவதைவிட வதந்தி என்று தான் கூற வேண்டும் அதை… ஏனெனில் எங்களுக்கு நன்றாக தெரியும் அது வதந்தி என்று. இவள் என்ன சொல்கிறாள் என்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் மிக். அவள் சிறிது இடைவெளிவிட்டு கூறினாள்…. நீங்கள் நின்று கொண்டிருக்கும் இதே இடத்தில் ஒரு பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்து புதைத்த தாக தான் அந்த வதந்தி. அது சரி அது வதந்தி என்று நீங்கள் எப்படி நம்புகிறீர்கள் என்று வினவினான். அந்தப் பெண்ணை கொலை செய்ததாக கூறப்படுபவர் இந்த லாட்ஜின் உரிமையாளர். அவர்தான் என்னுடைய கணவரின் நண்பர் ஆயிற்றே அதனால்தான் இது வதந்தி என்று எங்களுக்கு தெரியும். வதந்தி என்பதால் நானும் அடிக்கடி இங்கு வந்து தங்குவேன்… நீங்கள் மட்டுமா என்று மிக் கேட்க… இல்லை இல்லை கணவருடன் தான் என்றாள். அவனுக்குஉடல் முழுவதும் சிலீரென்று குளிர் வந்து சென்றது… நினைவிற்கு வந்தார் போல்…. சாரி நாளை காலை உங்களை சந்திக்கிறேன் என் மனைவி தலைவலியால்அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாள் என்று கூறிவிட்டு மேலே நடக்க தொடங்கினான். அவன் கேபினுக்குள் உள்ளே நுழைந்து கதவை தாழிட்டு பக்கத்து கேபினை பார்க்கும்போது விளக்கு அணைக்கப் பட்டு இருந்தது…. பரவாயில்ல அதற்குள் அந்தப் பெண் கேபினுக்குள் சென்றுவிட்டு இருக்கிறாளே என்று நினைத்துக்கொண்டான். மாத்திரை எடுத்து வருவதற்குள் தூங்கிவிட்டு இருந்த கேத்தியை எழுப்பி மாத்திரை கொடுத்தான் ஒரு அரைமணி நேரத்திற்குள் கேத்தி தூங்கிவிட மிக்கினால் தூங்க முடியவில்லை…. அந்தப் பெண் சொன்னதே வந்து வந்து சென்று கொண்டிருந்தது மனதிற்குள். எப்போது தூங்கினானோ அவனுக்கே தெரியவில்லை… காலை மனைவி எழுப்பியதும் தான் தெரிந்தது விடிந்து விட்டது என்று. காலை மணி 7 க்கு மேல் ஆகி விட்டிருந்தது…. நடந்ததைக் கேத்தியிடம் சொன்னான். இருவரும் பிரட்டில் தடவி சாப்பிட்டு விட்டு பக்கத்து ஊரான பேய் நகரத்துக்கு செல்ல ஆயத்தமானார்கள்…. அப்போதுதான் கவனித்தான் எதிரே அந்த லாட்ஜ் ஓனர் வருவது. என்ன நேற்றைய அதிக நேரம் உங்கள் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தீர்கள் போல் தெரிகிறது என்று வினவினான்? நானா நண்பனிடமா? என்று அவர் எதிர்கேள்வி கேட்டார். பிறகு ராபின் கூறியதை அவரிடம் கூறினான்…. அவர் முகத்தைப் பார்க்க வேண்டுமே பேய் அறைந்தவர் போல் இருந்தார்…
பிறகு சுதாரித்துக் கொண்ட அவர் கூறினார், ஆமாம் சிறிது நேரம் பேசி விட்டு சென்று விட்டார்.. ஏதோ முக்கிய வேலை காரணமாக 7 மணிக்கே சென்று விட்டனர் அவர்கள் என்றார். மிக்கும் நகரத்தை சுற்றி பார்த்துவிட்டு மதியம் அங்கேயே சாப்பிட்டு விட்டு மத்தியம் 2 மணி அளவில் கேபினுக்கு வந்தனர். அவர்கள் கேபினுக்குள் செல்வதற்கு முன்பே அந்த லாட்ஜ் ஓனர் அவர்களைப் பார்த்து…. மன்னிக்கவும், இந்த இரண்டு கேபிண்களுக்கு வரும் வாட்டர் மெயின் சப்ளை பஸ்ட் ஆகிவிட்டதால் இன்று இரவு நீங்கள் தங்க முடியாது உங்களுக்கு வேண்டும் என்றால் அடுத்த வாரம் வெள்ளி சனி இரு இரவுகளும் இலவசமாக கொடுக்கிறேன் என்றார். அதற்கு மிக் பரவாயில்லை அதற்கென நாங்கள் பொதுவாக எல்லாவற்றையும் பார்த்து விட்டோம் இரவு 9 மணிக்கு பேய் சுற்றுலா சென்றுவர இருந்தோம்… அடுத்த வாரம் எங்களால் வர முடியாது இன்னும் ஓரிரு மாதங்களில் வருகிறோம் இலவசமாக தர வேண்டாம் எங்களுக்கு என்றான். மிக்கும் கேத்தியும் மெல்போனுக்கு திரும்பி ஒரு வாரம் ஆகிவிட்டது.. வேலை பளுவின் காரணமாக ராசன் சென்று வந்ததை மறந்து விட்டனர். ஒவ்வொரு மாதத்திலும் கடைசி வெள்ளிக்கிழமை இரவு அலுவலக நண்பர்களுடன் வெளியே சென்று வெவ்வேறு நாட்டு ரெஸ்டாரண்டில் சாப்பிடுவது வழக்கம்… அந்த வெள்ளி அன்றும் அலுவலக நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அன்று இரவு அலுவலகத்திற்கு பக்கத்திலேயே உள்ள இந்திய உணவகத்தில் சாப்பிட முடிவு செய்தனர். அன்று மாலை ஒரு ஆறரை மணியிருக்கும் குளித்துவிட்டு ரெஸ்டாரன்ட் க்கு செல்ல கார் சாவியை தேடினான்…. ஐந்தரை மணிக்கு தான் வந்தான் அலுவலகத்திலிருந்து கார் சாவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை… ஒரு வழியாக கிடைத்தது ஸ்டடி ரூமில் கம்ப்யூட்டர் டேபிளில் பழைய கம்யூனிட்டி பேப்பர் மேல் இருந்தது, இங்கு எப்படி வந்தது என்று யோசித்துக் கொண்டே கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான். லாக் செய்துவிட்டு வந்த காரும் லாக் செய்யப்படாமல் இருந்தது.. வர வர ஞாபக சக்தி குறைந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டான். நண்பர்கள் எல்லோரும் வந்து சேர மணி ஏழரை ஆகிவிட்டது… எப்போதும்போல அரட்டைக் கச்சேரி உடன் அன்லிமிடெட் ஈட் ஆல் யூ கேன்… உண்டு முடிக்க மணி பத்தரைக்கு மேல் ஆகிவிட்டது… இனிமேல் தாமதிக்கக் கூடாது என்று கொஞ்சம் கொஞ்சமாக பேச்சை குறைத்துக் கொண்டனர்…. அப்படியும் மணி பதினொன்றை தொட்டுவிட்டது. மழை சிறு தூறலாக தூர துவங்கியது… எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு வெளியே வரும்போது கவனித்தான் தன்னுடைய கார் அருகில் யாரோ ஒரு பெண் இருப்பது போன்று… ஒரே வினாடிதான் யாருமே இல்லை என்று தெரிந்தது தன்னுடைய பிரமை என்று நினைத்துக்கொண்டு காரை கிளப்பினான். மெயின் ரோடு வழியாக செல்லாமல் பைபாஸ் வழியாக சென்றால் எளிதாக பத்து நிமிடங்கள் முன்னதாக வீட்டுக்கு சென்றுவிடலாம் என்று பைபாஸ் வழியாக காரை ஓட்டினான். தூறலாக துவங்கிய மழை பலத்த மழையாக மாறியது….. வைப்பரை முழு வேகத்தில் போட வேண்டியதாக போய்விட்டது…. 80 கிலோ மீட்டர் வேக ரோடில் 50 கிலோ மீட்டர் வேகத்தை தொடுவதே சிரமமாக இருந்தது. ஆஸ்திரேலியாவில் பொதுவாக ஹெட்லைட் வெளிச்சமே போதும் ஐ பீம் போடுவதே கிடையாது…. ஆள் அரவமற்ற கிராமப்புறங்களில் செல்லும்போது தவிர. பலத்த மழையின் காரணமாக மிக் இப்போது ஐ பீம் போட வேண்டியதாக போய்விட்டது. அப்போதுதான் கவனித்தான் சாலையோரமாக ஹெட் லைட் ஆன் செய்துவிட்டு ஒரு கார் நின்று கொண்டிருப்பது…. சாலை ஓரங்களில் போநட்டை திறந்து ஹெட் லைட் போட்டுவிட்டு ஒரு கார் நின்று கொண்டிருந்தால் அது பழுதடைந்து விட்டிருக்கிறது ரோட் சைட் கேர் காருக்காக காத்திருப்பதாக அர்த்தம். இந்த பலத்த மழையில் பாவம் எந்த குடும்பமோ என்னவோ சென்று பார்க்கலாம் என்று அந்த காரின் பின்னால் மெதுவாக காரை நிறுத்தினான். மழையில் முகம் நனையாமல் இருக்க கார்டனிங் தொப்பியை போட்டுக்கொண்டு இறங்கினான். என்ன ஆச்சரியம் காரில் இருந்தது ராசனில் பார்த்த ராபின். ஹலோ எப்படி இருக்கீங்க, இங்கே எங்கே? என்று கேட்டான். நண்பர்களுடன் ரெஸ்டாரண்டில் உணவு சாப்பிட வந்தேன்.. வீட்டிற்குச் செல்லும் வழியில் இங்கே மாட்டிக்கொண்டேன்… என்றாள். நீங்களும் இங்கே அருகில் தான் வசிக்கிறீர்களா? என்று கேட்டான் மிக். இல்லை நான் வசிப்பது எரிக்காவில் வார இறுதி விடுமுறைக்கு போலீஸ் டிடெக்டிவ்வாக இருக்கும் என் கசின் வீட்டிற்கு வந்துள்ளேன். பால் ஸ்மித் தான் என்னுடைய கசின் அவருடைய மொபைல் நம்பரை குறித்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று கூறினாள். அவள் கூற மிக்கும் குறித்துக்கொண்டான். என்னுடன் வருகிறீர்களா உங்களுடைய கசின் வீட்டில் விட்டு விடுகிறேன் என்று கூற அதற்கு அவள் இல்லை இல்லை என் கசினுக்கு போன் செய்து உள்ளேன் அவர் வந்து என்னை அழைத்துச் செல்வார் என்றாள்….
உங்கள் கசின் வரும்வரை நான் உங்களுடன் இருக்கட்டுமா என்று கேட்டதற்கு அவள் வேண்டாம் உங்களுக்கு ஏற்கனவே டைம் ஆகிவிட்டது வீட்டிற்கு செல்வதற்கு நீங்கள் செல்லுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார் என்னுடைய கசின் பால் என்றாள். நடு இரவில் ஒரு பெண்ணை தனியாக விட்டு விடுகிறோமே என்று சில நொடிகள் நினைத்து பிறகு அவளே வேண்டாம் என்று சொல்கிறாள் ஏன் இருப்பது என்று மிக் தன்னுடைய காருக்கு வந்து கிளம்பி சென்றான். சில நிமிடப் பயணத்திற்குப் பிறகு ரியர் வியூ மிரர்யில் பார்த்தான் ராபினும் அவளுடைய காரும் இருப்பதற்கான அடையாளம் தெரியவில்லை…. அதிக மழையினால் ஒரு வேளை தெரியாமல் இருக்கக் கூடும் என்று அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான். மறுநாள் சனிக்கிழமை இரவு பேய் கதைகள் கூறும் ஆண்ட்ரூவின் வீட்டிற்கு இரவு உணவுக்கு சென்றனர். இரவு உணவை முடித்துக் கொண்டு ஆண்டருவும் மிக்கும் சிறிது நேரம் வெளியே சென்று பேசிக்கொண்டிருக்கும்போது ராசனில் நடந்ததைக் கூறினான். ஆண்ட்ரு பயம் கலந்த குழம்பிய முகத்துடன் மிக்கை பார்த்து கேட்டான்… அந்தப் பெண்ணின் பெயர் என்னவென்று சொன்னாய் என்று. ராபின் என்று மிக் கூற….. உடனே அவனை அழைத்துக்கொண்டு ஸ்டடி ரூமில் இரண்டரை வருடங்களுக்கு முன் காணாமல் போனவர்களை பற்றிய காவல்துறையின் டேட்டா பேசில் பல போட்டோக்களை தள்ளிவிட்டு ஒரு பெண்ணின் போட்டோவில் நிறுத்தி… இந்தப் பெண்ணா நீ பார்த்தது என்று கேட்கும் முன்……. மிக் சரிந்து விழுந்தான். ஆமாம் மிக் பார்த்தது அந்த பெண்ணை தான். தண்ணீர் தெளித்தும் மிக்கினால் எழுந்து கண்டுகொள்ள முடியவில்லை…. உடனடியாக ஆம்புலன்ஸை அழைத்து அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் சென்று… இதோ இப்போதுதான் ஞாயிறு மதியம் மிக் கண் விழித்துப் பார்க்க.. ஆண்ட்ரூ சிறிது நேரம் அவனை விசாரித்து ஆறுதல் கூறிக் கொண்டிருக்கும் போது மிக் பால் ஸ்மித் போன் நம்பரை ஆண்ட்ரூவிடம் இடம் கூறி அவரிடம் விசாரிக்க சொன்னான். ஆண்ட்ரூ பால் ஸ்மித்க்கு போன் செய்ய பால் ஸ்மித் கூறியவை ஆண்ட்ரூவுக்கு மயக்கமே வர செய்தது…… இதை மிகச் சொல்லலாமா வேண்டாமா என்று என்று குழப்பத்தில் இருந்தான். சரி சொல்ல வேண்டாம் பால் ஸ்மித் வரட்டும் இங்கே என்று காத்திருந்தான். ராபின் கசின் பால் ஸ்மித் அந்த மருத்துவமனைக்கு வர ஆண்ட்ரூ அவரிடம் சென்று நடந்தவற்றைக் கூறினான். இப்போது பாலுக்கும் மரண பயம் தொற்றிக் கொண்டது….. பாலும் ஆண்ட்ரூவும் மிக் இருந்த அறைக்குள் சென்றனர். மிக் அரைமயக்கத்தில் விழித்திருந்தான். மிக்கிடம் நடந்தவற்றையும் விசாரித்த பால் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு ஏதும் கூறாமல் வெளியே வந்தார். பிறகு மூன்று நாட்களில் பல பல விஷயங்கள் நடந்து விட்டது…. திங்கட்கிழமை மிக்கை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து கொண்டு பால், ஆண்ட்ரு, மிக் மற்றும் 2 போலீசார் ராசன் லாட்ஜ் நோக்கி புறப்பட்டனர். ராசன் போலீசார் உதவியுடன் ராபின் கூறிய அதே இடத்தில் ராசன் காவல்துறை பெரிய எந்திரங்களை வைத்து நோன்ட… அங்கு ராபினின் எலும்புக்கூடு கிடைக்க…. அந்த லாட்ஜின் உரிமையாளரை விசாரிக்க….போலி பெயரில் லாட்ஜ் நடத்திவந்த உரிமையாளர் டர்னர் என்பவன் கைது செய்யப்பட…. மிக் ஓரிருநாட்களில் ஆஸ்திரேலியா முழுவதும் பிரபலமானான் மிக்குக்கு பல தொலைக்காட்சி நிறுவனங்களில் இருந்து பேட்டி காண போன் மேல் போன் வர கேத்தி அதிக மன அழுத்தத்தால் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டாள்.
தொடர்புக்கு @ melbournesivastories@gmail.com



