யார் By சிவா
- melbournesivastori
- Dec 24, 2020
- 6 min read
யாரோ அடி பட்டு குப்புறபடுத்து கிடந்தார்கள், உற்றுப் பார்த்ததில் பின் மண்டையில் பலமாக அடிபட்டு இருந்தது அதில் இருந்து ரத்தம் வழிந்து உறைந்து கிடந்தது. … சிறிது தூரத்தில் மொபைல் போன் அடித்தது அடித்தபடியே இருந்தது…. அந்த நபர் உடையதாக இருக்குமோ? சுற்றிப் பார்த்தால் அந்த அறையில் ஏதும் சிதைந்த தாகத் தெரியவில்லை எல்லாப் பொருட்களும் வைத்தது வைத்தபடியே இருந்தது. அடிபட்டு படுத்து கிடந்த அந்த நபரிடம் இருந்து ஒரு அசைவும் இல்லாததால் மரணித்து இருப்பாரோ என்று எண்ண தோன்றுகிறது…. படுத்துக் கிடந்தது ஸ்டடி ரூம் போல் தெரிந்தது… மிகவும் நேர்த்தியாக எல்லாம் வைக்கப்பட்டிருந்தது. சுற்றுப்புற சுவர்களில் பார்த்தால் புகைப்பட போஸ்டர்கள் அந்த நபருடைய கலையை ரசிக்கும் தன்மையை காட்டுபவையாக இருந்தது. ஆச்சரியம் அந்த ஸ்டடி ரூமிலும் சிசிடிவி கேமரா இருந்தது… கண்டிப்பாக சொல்ல முடியும் எல்லா அறைகளிலும் இத்தகைய கேமிராக்கள் இருக்கும்…சென்று பார்த்ததில் ஆமாம் எல்லா அறைகளிலும் சிசிடிவி கேமராக்கள் இருந்தது. வெளிப்புற கதவு திறக்கும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்து கொண்டு நேர்த்தியாக உடை அணிந்த ஒருவர் உள்ளே வருவது தெரிந்தது…. ஒரு சில நொடிகள் தான் அவருடன் மூன்று பேர் போலீஸ் உடையில் உள்ளே நுழைந்தனர். முதலில் வந்தவர் அந்த மூன்று பேருக்கும் தொடர்ச்சியாக பல உத்தரவுகள் பிறப்பித்தார். மூன்று போலீசில் இருவர் இளையவர்கள் ஒருவர் முதியவர். அந்த முதிய போலீஸார் உத்தரவிட்டவரை பார்த்து சரி ஜேம்ஸ் என்று பதிலளிக்கும் போது தான் தெரிந்தது முதலில் வந்தவர் பெயர் ஜேம்ஸ் என்று. ஜேம்ஸ் அவர்களின் இன்சார்ஜ் என்று தோன்றுகிறது. மூன்று போலீஸ்களும் மற்ற அறைகளில் ஜேம்ஸின் உத்தரவுபடி எதையோ தேடிக் கொண்டிருந்தனர். ஜேம்ஸ் கைகளில் கிளவுஸ் அணிந்துக்கொண்டு கீழே கண்ட உடலின் பாக்கெட்டுகளில் கைவிட்டு இருந்தவைகளை பத்திரமாக ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டுக்கொண்டார். ஜார்ஜ் என்று கத்தியபடி ஒரு போலீசாரை அழைக்க, இளைய போலீஸ்களில் ஒருவர் என்ன டிடக்டிவ் என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார். ஜார்ஜ் அந்த மொபைல் போனை ஓபன் செய்ய முடிகிறதா என்று பாருங்கள்… என்று கூற, ஜார்ஜ் மொபைல் போனின் என்டர் பட்டனில் அந்த உடலின் ஒவ்வொரு விரலின் ரேகை ஆக வைத்து வைத்து பார்க்க… கட்டை விரல் ரேகை மொபைல் போனை திறக்க ஒத்துப் போனது… கடைசி கால் 3 மணி நேரத்திற்கு முன் சென்றது தெரிந்தது…. அதன்பிறகு தொடர்ச்சியாக பல கால்கள் வந்தும் எடுக்காததிலிருந்து அந்த உடல் இறந்து சுமார் மூன்று மணி நேரம் ஆகியிருக்கும் என்று முடிவுக்கு வந்தனர். ஜேம்ஸ், ‘ஜார்ஜ், தாமஸை ரூமுக்கு அழைத்துக்கொண்டு உடலைத் திருப்பி போடுங்கள்’ என்று கூற… ஓரிரு நிமிடங்களில் உடலைத் திருப்பும் போது தான் 11,000 வோல்ட் டிரான்ஸ்பார்மரில் கையை விட்டது போன்று இருந்தது எனக்கு. யாரோ அடி பட்டு குப்புறபடுத்து கிடந்தார்கள், உற்றுப் பார்த்ததில் பின் மண்டையில் பலமாக அடிபட்டு இருந்தது அதில் இருந்து ரத்தம் வழிந்து உறைந்து கிடந்தது. … சிறிது தூரத்தில் மொபைல் போன் அடித்தது அடித்தபடியே இருந்தது…. அந்த நபர் உடையதாக இருக்குமோ? சுற்றிப் பார்த்தால் அந்த அறையில் ஏதும் சிதைந்த தாகத் தெரியவில்லை எல்லாப் பொருட்களும் வைத்தது வைத்தபடியே இருந்தது. அடிபட்டு படுத்து கிடந்த அந்த நபரிடம் இருந்து ஒரு அசைவும் இல்லாததால் மரணித்து இருப்பாரோ என்று எண்ண தோன்றுகிறது…. படுத்துக் கிடந்தது ஸ்டடி ரூம் போல் தெரிந்தது… மிகவும் நேர்த்தியாக எல்லாம் வைக்கப்பட்டிருந்தது. சுற்றுப்புற சுவர்களில் பார்த்தால் புகைப்பட போஸ்டர்கள் அந்த நபருடைய கலையை ரசிக்கும் தன்மையை காட்டுபவையாக இருந்தது. ஆச்சரியம் அந்த ஸ்டடி ரூமிலும் சிசிடிவி கேமரா இருந்தது… கண்டிப்பாக சொல்ல முடியும் எல்லா அறைகளிலும் இத்தகைய கேமிராக்கள் இருக்கும்…சென்று பார்த்ததில் ஆமாம் எல்லா அறைகளிலும் சிசிடிவி கேமராக்கள் இருந்தது. வெளிப்புற கதவு திறக்கும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்து கொண்டு நேர்த்தியாக உடை அணிந்த ஒருவர் உள்ளே வருவது தெரிந்தது…. ஒரு சில நொடிகள் தான் அவருடன் மூன்று பேர் போலீஸ் உடையில் உள்ளே நுழைந்தனர். முதலில் வந்தவர் அந்த மூன்று பேருக்கும் தொடர்ச்சியாக பல உத்தரவுகள் பிறப்பித்தார். மூன்று போலீசில் இருவர் இளையவர்கள் ஒருவர் முதியவர். அந்த முதிய போலீஸார் உத்தரவிட்டவரை பார்த்து சரி ஜேம்ஸ் என்று பதிலளிக்கும் போது தான் தெரிந்தது முதலில் வந்தவர் பெயர் ஜேம்ஸ் என்று. ஜேம்ஸ் அவர்களின் இன்சார்ஜ் என்று தோன்றுகிறது. மூன்று போலீஸ்களும் மற்ற அறைகளில் ஜேம்ஸின் உத்தரவுபடி எதையோ தேடிக் கொண்டிருந்தனர். ஜேம்ஸ் கைகளில் கிளவுஸ் அணிந்துக்கொண்டு கீழே கண்ட உடலின் பாக்கெட்டுகளில் கைவிட்டு இருந்தவைகளை பத்திரமாக ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டுக்கொண்டார். ஜார்ஜ் என்று கத்தியபடி ஒரு போலீசாரை அழைக்க, இளைய போலீஸ்களில் ஒருவர் என்ன டிடக்டிவ் என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார். ஜார்ஜ் அந்த மொபைல் போனை ஓபன் செய்ய முடிகிறதா என்று பாருங்கள்… என்று கூற, ஜார்ஜ் மொபைல் போனின் என்டர் பட்டனில் அந்த உடலின் ஒவ்வொரு விரலின் ரேகை ஆக வைத்து வைத்து பார்க்க… கட்டை விரல் ரேகை மொபைல் போனை திறக்க ஒத்துப் போனது… கடைசி கால் 3 மணி நேரத்திற்கு முன் சென்றது தெரிந்தது…. அதன்பிறகு தொடர்ச்சியாக பல கால்கள் வந்தும் எடுக்காததிலிருந்து அந்த உடல் இறந்து சுமார் மூன்று மணி நேரம் ஆகியிருக்கும் என்று முடிவுக்கு வந்தனர். ஜேம்ஸ், ‘ஜார்ஜ், தாமஸை ரூமுக்கு அழைத்துக்கொண்டு உடலைத் திருப்பி போடுங்கள்’ என்று கூற… ஓரிரு நிமிடங்களில் உடலைத் திருப்பும் போது தான் 11,000 வோல்ட் டிரான்ஸ்பார்மரில் கையை விட்டது போன்று இருந்தது எனக்கு. ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த எனக்கு யார் என்னை கொன்றார்கள் என்ற கேள்வி ஈட்டியாக என்னுல் தொலைத்தது. ஜேம்சும் மற்ற மூன்று போலீசாரும் பாரன்சிக் நடைமுறைகளை முடித்துக்கொண்டு, மார்ச்சுவரி வேனுக்காக காத்திருந்தார்கள். நான் இனி எதையும் விடுவதாக இல்லை கடைசிவரை இருந்து என்னை கொன்றவனை கண்டுபிடித்து பழி வாங்குவதைத் தவிர வேறு ஏதும் வேலை இல்லை எனக்கு. இனி ஜேம்ஸை பின் தொடர்வது தான் அதற்கான சிறந்த வழி என்று முடிவு செய்தேன். சிறிது நேரத்திற்குப் பிறகு பிண வண்டி வந்து என்னை எடுத்துச் சென்றார்கள். நான் ஜேம்ஸ் உடன் சென்று அவர் காரில் பயணித்தேன். அவர்கள் காவல்துறை அலுவலகத்தை அடைந்து நடந்தவைகளை மேலதிகாரியிடம் விவரிக்கும் விஷயத்தைக் கேட்டு எனக்கு தூக்கிவாரிப்போட்டது. ஜேம்ஸ் கூறினார் கொலைகாரனோ இல்லை கொலைகாரர்களோ சிசிடிவியின் ரெக்கார்டர்களை எடுத்துச் சென்று விட்டிருப்பது. என்னை கொன்றவனோ கொன்றவர்களோ இன்றே தெரிந்து விடும் என்று நம்பிக் கொண்டிருந்த எனக்கு இது பேரிடியாக விழுந்தது. இந்த சமயத்தில்தான் இளம் போலீஸ் ஜார்ஜ் குறுக்கிட்டு ரெக்கார்ட் அவர்களை எடுத்துச் சென்றுவிட்டு இருந்தாலும் பரவாயில்லை கிளவுடில் அந்த பதிவுகள் இருக்கும் என்றார். கணினி தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த ஜார்ஜ் விவரிக்கத் தொடங்கினார், ‘சிசிடிவி இன் காட்சிகள் ரெக்கார்டரில் பதிவாகும் அதே சமயத்தில் கிளவுட் இலும் பதிவாகும், அது அந்த கேமரா தயாரித்த கம்பெனியின் கம்ப்யூட்டர் சர்வரில் இருக்கும்… நாம் அந்த வீட்டு ஓனரின் சம்மதத்தோடு அவற்றைப் பெற்று அன்றைய நிகழ்ச்சிகளை காட்சிகளை பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம் என்றார்’. இதை இடம் போலீஸ் தாமஸ் ஒத்துக்கொள்ளவில்லை….. கிளவுடுக்கு ரிஜிஸ்டர் செய்திருந்தால் மட்டுமே கட்சிகள் பதிவாகி இருக்கும் என்றார். இருந்தும் எனக்கு நம்பிக்கை துளிர்த்தது…. அந்த வீட்டு ஓனர் தான் என்னுடைய புதிய கஸ்டமர் லூக் தானே? என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே… ஜேம்ஸ் கூறின செய்தி கூரிய கத்தியை கொண்டு என்னை குத்தினால் போல் இருந்தது. ஜேம்ஸ் கூறியது இதுதான்… ‘அந்த வீட்டு ஓனரின் பெயர் ஜான் அவர் தற்போது ஊரில் இல்லை ஒரு வார காலமாக குடும்பத்தாருடன் சுற்றுலா சென்றிருப்பதாக’ லூக் ஏன் என்னிடம் இது தன்னுடைய வீடு என்று கூற வேண்டும்?எனக்கு புரியவில்லை.. வேறு வழி இல்லை காத்திருக்கத்தான் வேண்டும் ஜேம்ஸ் அந்த சிசிடிவி காட்சிகளை பார்க்கும் வரை. ஜான் சுற்றுலா முடிந்து வீடு திரும்பியதும் காவல்துறைஅலுவலகத்திற்கு வர வைக்கப்பட்டார். அங்கு அந்த முதிய போலீசார், ஜார்ஜ், ஜேம்ஸ் மட்டுமே இருந்தார்கள் தாமஸ் அவசர வேலையாக விடுகளில் சென்றுவிட்டதாக கூறினார்கள்.இந்த தருணத்திற்காக காத்திருந்த நான் மிகவும் உன்னிப்பாக கவனிக்க தொடங்கினேன். ஜானிடம் யூசர் நேம் பாஸ்வேர்ட் வாங்கிக்கொண்டு லாகின் செய்து அங்கிருந்த பெரிய தொலைக்காட்சியில் காட்சிகளை ஓட விட்டனர். நான் பேயோ இல்லை ஆவியோ தெரியாது ஆனால் எனக்கே படபடப்பு வந்து விட்டது…. நான் கதவை திறந்து கொண்டு உள்ளே வருவது வந்து படி ரூமுக்கு சென்று டிஜிட்டல் போட்டோகிராபி புத்தகத்தை எடுத்துக்கொண்டு அமர்வது…. சிறிது நேரம் ஏதும் நடக்கவில்லை… எனக்கு படபடப்பு தாங்கவில்லை…. அப்போது வீட்டின் முன்புறம் இருந்த சிசிடிவி கேமராவில் தொப்பி அணிந்த ஒரு உருவம் வருவது தெரிந்தது. நடந்துவரும் உருவத்தின் முகத்தை பார்க்க முடியவில்லை தொப்பி அணிந்து இருந்ததால்… மேலும் குணிந்து கொண்டே நடந்து வருவதால் முகம் தெரிய வாய்ப்பே இல்லாமல் இருந்தது. அந்த நிமிடத்தில் காட்சியை தற்காலிகமாக நிறுத்தி வைத்து ஜேம்ஸ் கூறினார்….. ‘நடந்துவரும் நபருக்கு அங்கிருக்கும் சிசிடிவி கேமராக்கள் எங்கேங்கே உள்ளது என்று நன்றாகவே தெரிந்து இருக்கிறது’ பிறகு தொடர்ந்து காட்சிகளை ஓடவிட்டனர். அந்த உருவம் மெதுவாக உள்ளே வந்து முன்புற கதவை மூடிவிட்டு அருகிலிருந்த பேஸ்பால் பேட்டை எடுத்துக்கொண்டு.. அடிமேல் அடிவைத்து ஸ்டடி ரூமில் அமர்ந்திருந்த என் பின்னால் வந்து ஒரே அடியாக அந்த பேட்டினால் அடித்தது…. அமர்ந்திருந்த எனக்கு எந்த வாய்ப்பும் இல்லாமல் அந்த நொடியே கீழே விழுந்து உயிர் பிரிந்தது. எனக்கு கோபம் தலைக்கு ஏறியது… அந்த உருவத்தின் முகத்தை பார்க்க… அந்த உருவமோ எந்த சமயத்திலும் சிசிடிவி கேமராக்களை பார்க்காமல் தவிர்த்தது. என்னால் வருத்தத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை… இவ்வளவு தூரம் வந்து விட்டும் என்னை கொலை செய்த காட்சியைப் பார்த்தும் கொலைகாரனை பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம். பேஸ்பால் பேட்டுடன்அந்த உருவம் மெதுவாக வெளியே செல்லும்போது தான் அந்த உருவத்தின் துரதிஷ்டமும், நான் இறந்தும் எனக்கிருந்த அதிர்ஷ்டமும் நடந்தது. சில சமயம் பலமாக வீசும் காற்று அன்று வீசியது….. கார் ஏற அந்த உருவம் முற்பட்ட சமயத்தில் வீசிய பலமான காற்று தொப்பி பறந்து செல்ல தொப்பியை பிடிக்க அந்த உருவம் திரும்ப.. என் அதிர்ச்சி முதன்முதலாக உடலை திருப்பும்போது என்னை பார்த்து அதிர்ச்சியை போன்றே இருந்தது… அந்த உருவம் வேறு யாருமில்லை இரண்டு இளம் போலீசில் ஒருவரான தாமஸ். அதிர்ச்சி எனக்கு மட்டும் இல்லை அங்கு இருந்த எல்லோருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை தாமஸை இதற்கு முன் எப்போதும் நான் பார்த்ததில்லை அன்று முதல் முறையாக பார்த்தேன் அவன் ஏன் என்னை கொலை செய்ய வேண்டும்? கிளர்ந்தெழுந்த வெறியை அடக்கி கொண்டு தாமஸ் ஏன் என்னை கொலை செய்தான் என்ற காரணம் தெரியும் வரை பொறுமையாக இருக்க முடிவு செய்தேன். தாமஸ உடனடியாக கைதுசெய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தாமஸ் அவனுடைய வீட்டில் இல்லாததால் மாநிலம் முழுவதும் போலீஸ் நிலையங்களுக்கு அலர்ட் செய்யப்பட்டது. 24 மணி நேரத்திற்குள் விக்டோரியாவிலிருந்து சவுத் ஆஸ்திரேலியா கடக்க முயற்சி செய்யும்போது தாமஸ் கைது செய்யப்பட்டான். போலீசே கொலைகாரனாக இருப்பதால் மிகுந்த பரபரப்புக்கு உள்ளானது அந்த காவல் நிலையம். தாமஸ் விசாரணை அறைக்கு கொண்டு வரப்பட்டான். பிடிகொடுக்காமல் பேசிய தாமஸ் கடைசியில் 5 மணிநேர கடுமையான விசாரணைக்கு பிறகு நடந்தவைகளை கூறத் தொடங்கிய விஷயங்களைக் கேட்டு அங்கு ஏசி இருந்தாலும் எல்லோருக்கும் வியர்க்க தொடங்கியது. தாமஸ் மட்டுமல்லாமல் இன்னும் சில காவல் நிலையங்களில் மற்றும் சில போலீசாரும் லூக் உடன் சேர்ந்து போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது. நான் கண்டுபிடித்த லூக்கின் நிழல் பரிவர்த்தனைகள் மிகப் பிரம்மாண்டமான போதைப்பொருள் வர்த்தகத்தின் ஒரு சிறிய பகுதியே என்றும்.. இது வெளிவந்தால் தொடர்புடைய எல்லோரும் எல்லா வர்த்தகமும் தெரியவரும் என்பதால் என்னை கொலை செய்ய திட்டமிட்டு கொலை செய்ததும் தெரியவந்தது. எனக்கு வெறி தலைக்கு ஏறி தாமஸ் மீது பாய்ந்தேன். தாமஸ்சிற்கு எந்த பாதிப்பும் இல்லை… அந்தத் தருணத்தில்தான் பேயோ ஆவியோ நினைத்தால் பழி வாங்க முடியும் என்ற பொய்யான கூற்றை உணர்ந்துகொண்டேன். என் இயலாமையை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை… என்னால் முடிந்தவரை எப்படியாவது பழி தீர்க்க வேண்டும் என்ற வெறி உச்சத்தை அடைந்தது. பிசிகல் ஆக என்னால் எதுவும் செய்ய முடியவில்லை… என்ன செய்வது என்ற யோசனையிலேயே ஜேம்ஸை பின்தொடர்ந்து சென்றேன். ஜேம்ஸ் வீட்டில் இரவு படுக்கைக்கு முன் ஏதோ யோசனையில் லேப்டாப்பை ஓபன் செய்து.. நான் கண்டுபிடித்தவைகளின் தொடர்ச்சியை தேடத் தொடங்கினார்… அவரின் தேடலை பார்த்து நீங்கள் தேடுவது தவறான பகுதி என்று நினைக்கும் போதே நான் நினைப்பது அவரின் லேப்டாப்பில் தெரிய ஆரம்பித்தது.. ஒரு கணம் மிகுந்த அதிர்ச்சியுடன் நீங்கள் யார் என்று கேட்டார்.. பயப்பட வேண்டாம் நான் தான் டேவிட் இங்கே ஆவியாக உங்களுடன் எப்போதும் இருக்கிறேன்… இது அப்படியே லேப்டாப்பில் பிரதிபலிக்க… வியர்க்க விருவிருக்க ஜேம்ஸ் சுற்றுமுற்றும் பார்த்தார். நான் கூறினேன் பயப்படவேண்டாம் என்னால் முடிந்த வரை உங்களுக்கு உதவி செய்கிறேன், என்னுடைய ஒரே குறிக்கோள் என்னை கொன்றவர்களை பழி வாங்குவது.. அது உங்களால் மட்டுமே முடியும்… மேலும் எனக்கு உருவம் இல்லாததால் என்னால் முடிந்த உதவிகளை இந்த கேசில் உங்களுக்கு செய்கிறேன் என்றேன். ஜேம்ஸ்க்கு கொஞ்சம் தைரியம் வந்தது… மிக்க நன்றி இப்போது எனக்கு பயமில்லை நம் நட்பை தொடரலாம் என்று கூற…தொடர்ந்தது எங்கள் நட்பு. கிளாரிண்டாவின் டேவிட் கொலை வழக்கில் டேவிட்டின் புதிய கஸ்டமர் லூக் கைது என்பதும் கொலையுண்ட வீடு ஒன்றரை வருடத்திற்கு முன்பு லூக்கின் வீடு என்பதும் மறுநாள் செய்தியில் வந்தது. இந்த செய்தியை பார்த்த இதில் சம்பந்தப்பட்ட மற்றவர்கள் மெத்தனமாக இருக்க என் மூலமாக ஜேம்ஸ் நிறைய கண்டு பிடித்து விட்டார். ஒட்டுமொத்தd போதைப்பொருள் கடத்தல் கும்பலே ஜேம்ஸ்னால் பிடிக்கப்பட்டனர். விக்டோரியா மாகாணத்தின் மிக உயரிய போலீஸ் விருது ஜேம்ஸ்சுக்கு கிடைக்க என் ஆத்மாவும் சாந்தி அடைந்தது.



